UYIRI

Nature writing in Tamil

Archive for January 2016

பொங்கல் பறவைகள் – 2016

with 2 comments

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (ஜனவரி 15-18) இரண்டாம் ஆண்டும் (2016) இனிதே நடந்து முடிந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பலர் பங்கு கொண்டனர். நான்கு நாட்கள் நடந்த இக்கணக்கெடுப்பில் இதுவரை (18 ஜனவரி 22:30 மணிவரை) 530 பறவைப் பட்டியல்கள் eBird இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 322 வகையான பறவைகள் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு birdcount.inல் இப்பக்கத்தைக் காண்க.

என் பங்கிற்கு பல வகையான பறவைகளை பார்த்து பட்டியலிட்டுக் கொண்டிருந்தேன். பார்த்த எல்லா பறவைகளும் அழகுதான். அவற்றில் சிலவற்றை படமெடுத்துக் கொள்ள முடிந்தது. எடுத்த சில படங்களில் ஒழுங்காக வந்தவைகளில், எனக்குப் பிடித்தவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.

கம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow)

கம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow)

கம்பி வால் தகைவிலான்கள்

கம்பி வால் தகைவிலான்கள்

கம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow) பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் பார்த்த பறவைகளில் மனதில் நின்ற முக்கியமான தருணங்களில் ஒன்று இப்பறவைகளைக் கண்டது. தஞ்சையில் உள்ள வெண்ணாறு ஆற்றுப்பாலத்தில் இருந்து வெகுநேரம் இப்பறவைகள் பறந்து திரிவதையும், பாலத்தின் அருகில் சென்ற கம்பியில் வந்தமர்ந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மடையான் Indian pond heron

மடையான் Indian pond heron

அல்லிக் குளத்தில் அல்லி இலைகளின் மேல் வந்திறங்க முயற்சித்து இலைகள் அமிழ்ந்து போக மீண்டும் குளத்தின் கரையோரமாகவே சென்று அமர்ந்தது இந்த மடையான். தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் இருந்த புலவன்காடு எனும் ஊரின் அருகில் சாலையோரமாக இருந்தது இந்த அழகான அல்லிக்குளம்.

மாடு மேய்க்கும் பறவைகள் - உண்ணிக்கொக்கு, கரிச்சான் மற்றும் மைனா.

மாடு மேய்க்கும் பறவைகள் – உண்ணிக்கொக்கு (Cattle Egret), கரிச்சான் (Black Drongo) மற்றும் மைனா (Common Myna).

 

ஈரத்தை உலர வைக்கும் சின்ன நீர்காகம்

ஈரத்தை உலர வைக்கும் சின்ன நீர்காகம் (Little Cormorant)

 

ஆலம் பழத்தை உண்ணும் செம்மார்பு குக்குருவான் ((Coppersmith Barbet)

ஆலம் பழத்தை உண்ணும் செம்மார்பு குக்குருவான் ((Coppersmith Barbet)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் ஏரிக்கு சென்றிருந்தோம். அங்கு பார்த்த சில பறவைகள் தான் இவை.

Advertisements

Written by P Jeganathan

January 21, 2016 at 6:59 pm

Posted in Birds

Tagged with ,