UYIRI

Nature writing in Tamil

அஞ்சல் தலையும் பறவைகளும்-20

leave a comment »

மலேசியா வெளியிடும் அஞ்சல் தலைகள் எப்போதுமே அழகாக இருக்கும்.

இங்கு இருப்பவை வெள்ளிக் காது மெசியா Silver-eared Mesia (Leiothrix argentauris) (இடது). இவை இந்தியாவில் இமயமலை அடிவாரப் பகுதிகளிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படுகிறது.

குட்டி ஈப்பிடிப்பான் Pygmy Flycatcher (Ficedula hodgsoni) (வலது மேலே) உடலின் மேல் பகுதி ஆண் பறவையில் நீல நிறமாகவும், கீழே மங்கலான ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். பெண்பறவையின் மேல்புறம் பழுப்பு நிறத்திலும், கீழே வெளிறிய பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவை இந்தியாவில் இமயமலை அடிவாரப் பகுதிகளிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படுகின்றன.

ஜாவா தேன்சிட்டு Javan sunbird or scarlet sunbird (Aethopyga mystacalis) (வலது கிழே). இது ஜாவா தீவில் மட்டுமே தென்படும் ஓரிட வாழ்வி. இந்த அஞ்சல் தலையில் உள்ள தேன்சிட்டு படத்தில் ஒரு சிறு குழப்பம் இருந்தது. ஆண் பறவை ஜாவா தேன்சிட்டு. ஆனால் பெண் தேன்சிட்டு சற்று வித்தியாசமாக இருந்தது. பறவை நூல்களை வைத்து சரிபார்த்ததில் அது Temminck’s Sunbird Aethopyga temminckii டெம்மின்ங்கின் தேன்சிட்டு போல இருந்தது. இதை உறுதிசெய்ய சரிபார்க்க வேண்டும். மேலும் அதன் மலேயப் பெயர் Burung Kelicap Merah என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Written by P Jeganathan

November 20, 2023 at 9:00 am

Leave a comment